நம் வாழ்க்கையில் எவ்வளவோ பேரிடம் நட்பாக பழகுகுறோம்! அதில சிலருடைய
குண்ங்கள் மிகவும் பிடிக்கும்! அதில் யாரேனும் ஒருவர் மீது காதல் வருவது
தவறல்ல! தொடர்கதி போல் மாறி மாறி நண்பர்களாக பழகுபர்கலிடமெல்மால் காதல்
வந்தால்தான் தவறு! இருதரப்பிலும் திருமணத்திற்கான சத்தியக்கூறுகளும்,
சூழ்நிலைகளூம் சாதமாக இருந்தால் காதலிப்பதில் தவறில்லை!
நட்பு காதலாக மாறினால் கண்டிப்பாக திறுமணத்தில் முடிய வேண்டும்! இல்லை என்றால்
அது நட்பியும் தரம் தாழ்த்தி காதலையும் கொச்சைப்படுத்தியது போல் ஆகிவிடும்!
நட்புக்கும் காதலுக்கும் என்ன வித்தியாசம்!
நல்ல நட்பில் அழகுக்கும், உணர்ச்சிகளுக்கும் இடமில்லை! காதலில் இதற்கு
முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது! இதுதான் முக்கியமான வித்தியாசம்!
தன்னுடன் நட்பாக பழகுபவர் இன்னொருவருடன் காதாலாக பழகினால் அதை ஏற்றுக்கொள்லும்
மனமுடையது நட்பு!
தன்னுடன் காதலாக பழகுபவர் இன்னொருவருடன் நட்பாக பழகினால் கூட அதை
ஏற்றுக்கொள்ள தயங்குகிறது காதல்! காதலிப்பவர்கள் வாழ்க்கையை பற்றி நிரைய
கூட்டல் கழித்தல் கணக்கெல்லாம் பார்த்து விட்டுதான் 4காதலிப்பார்கள்! நட்புக்கு
அதெல்லாம் தேவையில்லை!
நட்பு காதலாக மாறுவதன் பலம் என்ன?
யாரென்று தெரியாத ஒருவரை திடீரென காதலிப்பதை விட, நன்கு தெரிந்த குணங்கள்
புரிந்த ,ஒருவரை காதலிப்பது பாதுகாப்பானது!
நட்பு காதலாக மாறுவதன் பலவீனம் என்ன?
நல்லநண்பர்கள் என்று நிறைய பேர் (பெற்றோர்கள் உட்பட)
நம்பிக்கொண்டிருக்கும்போது , காதலர்கள் என்றூ சொல்லி அந்த நம்பிக்கையை
சிதைப்பது!
நட்பு எப்போது காதலாக மாறுகிறது?
நட்பாக பழகுவளி(னி)ன் குணங்கள் நமக்கு் பிடிக்கும்போது!
நம்முடைய குணங்கள் அவளு(னு)க்கும் பிடிக்கிறது என்று நமக்கு தெரிய வரும்போது!
அவள்(ன்)் மனதில் காதலாக வேறு யாரும் இல்லை என்று உறுதியாக தெரியவரும்போது!
அவளை(னை) விட சிறந்த வாழ்க்கைத்துணை கிடைக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை
என்ற எண்ணம் வரும்போது!
என்னால் அவளுடைய வாழ்க்கையும் அவளால் என்னுடைய வாழ்க்கையும் நன்றாக இருக்கும்
என்று நம்பிக்கை வரும்போது!
நட்பு காதலாகவும் ,அந்த காதல திருமணத்தில் முடியவும் சந்தர்ப்ப சூழ்நிலைகள்்
பொருந்தி வரும் என்ற எண்ணம் வரும்ப்போது!
இது போனற பல எண்ணங்கள் மனதில் தோன்றும்போது நட்்பு காதலாக மாறுகிறது!
திருமணமும் செய்யும் பட்சத்தில் ,நட்பு காதலாவதில் தவறில்லை! என்பது
என்கருத்து!
இப்படிக்கு
தினேஷ் இன் பீல் மை லவ்
1 comments:
romba feel panni rasithu irukeenga....thirumbi ellam meentum vara mattom boss
Post a Comment